;
Athirady Tamil News

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

0

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################

யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த சமய, சமூகப் பற்றாளருமான சுதா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு சீவரெத்தினம் சுதாகரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் இன்றைய தினம் முன்பள்ளி மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் சிலர் கலந்து கொண்டு திரு சுதாகரன் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கு கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுதா எனும் திரு.சீவரெத்தினம் சுதாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதேவேளை சுதா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு சுதாகரன் அவர்களது குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் கலந்து கொண்ட முன்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களாக சித்திரக் கொப்பிகளும், கலர் சொக் பெட்டிகள், பென்சில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ்சில் வசிப்பிடமாகவும் கொண்ட சுதா அவர்களின் பிறந்தநாளை வவுனியா குழந்தை ஜேசு முன்பள்ளி பாடசாலையின் மாணவர்கள், சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

ஆசிரியர் திருமதி லொயன் ஜான்சிகா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் வவுனியா குழந்தை ஜேசு முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி யாகுலநாயகி கதிஷ்வரன், திருமதி லொயன் ஜான்சிகா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிறந்த நாள் சிற்றுண்டி வழங்கப்பட்டது. கற்றல் உபகரணங்களாக சித்திரக் கொப்பிகளும், கலர் சொக் பெட்டிகள், பென்சில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் சுதாகரன் அவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தின் அனைத்து நிகழ்வுகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வாழ்வாதார உதவிகள் வழங்கி தாயக மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் சமூக நற்பணிகளுக்காக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை திரு.சுதாகரன் அவர்களது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தாயக உறவுகளுக்கு வழங்கிய உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்தினருக்கு இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
31.01.2025

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ)

 


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.