;
Athirady Tamil News

அம்பாறையில் பூஜைப் பொருட்களுடன் கைதான குழு ; நடத்தபடவிருந்த சட்டவிரோத செயல்

0

அம்பாறை – ஹிங்குரான பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஐந்து சந்தேக நபர்கள் தமன பொலிஸாரால் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமன பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
சந்தேக நபர்களிடமிருந்து பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 71 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அம்பாறை, மினுவாங்கொடை, பூகொடை மற்றும் கொடதெனிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.