ஜனநாயகன், கரூர் சம்பவம்! முதன்முறையாக விஜய்யின் பேட்டி
NDTV ஊடகத்தின் Tamilnadu Summit நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
அவர்களுடன் 1 மணிநேர உரையாடலில் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியுள்ளார்.
நீங்க கிங்மேக்கரா?
இந்த சந்திப்பின் போது விஜய்யிடம், நீங்கள் ஒரு கிங்மேக்கரா என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு நான் போராடி வெற்றி பெறுவேன், தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கலைஞர் கருணாநிதி என்னுடைய ரோல் மொடல்கள் என தெரிவித்தார்.
33 ஆண்டு கால சினிமா பயணம்
என்னுடைய 33 ஆண்டு கால சினிமா பயணத்தை விட்டுவிடுவது அவ்வளவு எளிதானது அல்ல, தற்போது எனது கவலை முழுக்க மக்களின் பிரச்சனையில் தான் இருக்கிறது, இது திடீரென எடுத்த முடிவு அல்ல, கொரோனா சமயத்தில் அரசியலுக்கு வருவது பற்றி சிந்தித்தேன், இது ஒரு நீண்ட கால பயணம், பின்வாங்கப்போவதில்லை.
ஜனநாயகன்
எனது அரசியல் வருகை படத்தை பாதிப்பது உண்மையில் வருத்தம் தான், தயாரிப்பாளருக்காக வருந்துகிறேன், ஆனால் இதுநான் எதிர்பார்த்த ஒன்று தான், அதற்காக மனதளவில் நான் தயாராக இருந்தேன்.
கரூர் சம்பவம்
அதை நான் எதிர்பார்க்கவில்லை, எனக்கு மிகப்பெரிய வேதனையை அளித்தது என தெரிவத்துள்ளார்.
மேலும் இது தான் தன்னுடைய முதல் உரையாடல் என்றும், விரைவில் சரியான நேரத்தில் ஊடகங்களை சந்தித்து பேசுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.