டெல்லியில் பரவும் பறவை காய்ச்சல்; உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்புப்பணி தீவிரம்
டெல்லி,
தலைநகர் டெல்லியில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. எச்5என்1 என்ற வகை பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, தேசிய உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சலால் 12 பறவைகள் உயிரிழந்துள்ளன.
இதையடுத்து, டெல்லியில் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூங்காக்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காக்களில் உள்ள பறவைகள், விலங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.