தண்டவாளத்தில் விழுந்த கார் தப்பியது
பதுளை-கொழும்பு பிரதான வீதியில் பண்டாரவளை கொலதென்ன ரயில் கடவைக்கு அருகில் இன்று (4) மதியம் மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மோட்டார் வாகனம் ரயில் பாதையில் சாய்ந்து ரயில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளையில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஓட்டுநர் தூங்கியதால் சாலையை விட்டு விலகி ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்தது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில், மோட்டார் வாகனம் ரயில் தண்டவாளத்தில் கவிழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த இடத்தை கடந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.