;
Athirady Tamil News

நாய் மீது வெந்நீரை ஊற்றிய நபர்; ஈவிரக்கமின்றிய செயல்

0

பொகவந்தலாவில் கடையொன்றின் முன் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது ஒருவர் வெந்நீரை ஊற்றி நாயை விரட்டும் காட்சி பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த நாய் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அக்கடையை ஒட்டிய பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளரே, நாய் மீது வெந்நீரை ஊற்றியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெந்நீரை ஊற்றியதும் நாய், வலியால் அலறிக் கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.