;
Athirady Tamil News

வடக்கு கிழக்கு உட்பட 09 மாகாணங்களுக்கும் வெளியான அறிவிப்பு

0

நாட்டில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமுள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த போதைப்பொருள் பயன்பாட்டை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெரோயின், ஐஸ், கொக்கைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பற்றிய தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த காவல்துறை மா அதிபர் கைபேசி எண்ணை நேரடியாக அழைப்பதன் மூலம் பொதுமக்கள் இன்று முதல் வழங்கலாம்.

வழங்கப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், மூத்த டி.ஐ.ஜி.க்கள் தேவையான சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட மேலும் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பார்கள்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க குடிமக்களாக நீங்கள் வழங்கும் ஆதரவை சிறிலங்கா காவல்துறை பெரிதும் பாராட்டுகிறது, மேலும் சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.க்களின் பெயர்கள் மற்றும் கைபேசி எண்கள் பின்வருமாறு,

மேல் மாகாணம்

சஞ்சீவ தர்மரத்ன – 071-8591991

தென் மாகாணம் தகித்சிறி ஜெயலத் – 071-8591992

ஊவா மாகாணம் மகேஷ் சேனநாயக்க – 071-8592642.

சப்ரகமுவ மாகாணம்

மஹிந்த குணரத்ன – 071-8592618

வடமேற்கு மாகாணம்

அஜித் ரோஹண – 071-8592600

மத்திய மாகாணம்

லலித் பத்திநாயக்க -071-8591985

வடமத்திய மாகாணம்

புத்திக சிறிவர்தன – 071-8592645

வடக்கு மாகாணம்

டி.சி.ஏ. தனபால 071-8592644

கிழக்கு மாகாணம் . வருண ஜெயசுந்தர – 071-8592640

You might also like

Leave A Reply

Your email address will not be published.