;
Athirady Tamil News

யாழில் நடுகடலில் பலியான குடும்பஸ்தர் ; தொலைபேசியில் இறுதியாக மனைவிக்கு கூறிய விடயம்

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி – கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 44 வயதுடைய குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

திடீர் சுகவீனம்
இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

உடனடியாக இன்னொரு படகுமூலம் கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே மீனவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.