;
Athirady Tamil News

தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய நாமல் ராஜபக்ச

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தனது மாதாந்திர சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நன்கொடையாக அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட “ஆதரய” நலத்திட்டத்திற்கு அவர் தனது உதவியை வழங்கியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச ,

நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பையும் ஆதரவையும் வழங்க விரும்பும் எவருக்கும் இந்த திட்டம் திறந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 300,000 குழந்தைகள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.