ஹெரோயினுடன் பெண் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் பெண்ணொருவர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரது உடமையில் இருந்து 2கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயினை மீட்டுள்ளனர்.