;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1811204.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

தமிழர் பகுதியொன்றில் கடைக்கு முன்னாள் கிடந்த சடலத்தால் பரபரப்பு

0

கிண்ணியா – தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று காலை கிண்ணியா பொலிசார் மீட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூரை சேர்ந்த 55 மதிக்கத்தக்க குடும்பஸ்தராக இருக்கக்கூடும் என கிண்ணியா பொலிஸார் ஆரம்ப விசாரணையின்போது தெரிவித்தனர்.

தீவிர விசாரணை
கிண்ணியா தோனாவில் கடலூர் முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றின் முன்னால் மேற்குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், சிகப்பு நிற சட்டையும், சாம்பல் நிற கருப்பு கோடு போட்ட சாரமும் அணிந்துள்ளார். அவர் ஊன்றிச் செல்லும் கை தாவல் ஒன்றும் சடலம் காணப்படும் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் காணப்பட்டுள்ளது.

இரவு இவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலையில் சடலத்தை கண்ட கிண்ணியா பொதுமக்கள் சிலர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.