;
Athirady Tamil News

பெங்களூரு அருகே வந்தே பாரத் ரயில் மோதியதில் 2 நர்சிங் மாணவர்கள் பலி

0

பெங்களூரு அருகே வந்தே பாரத் ரயில் மோதியதில் 2 நர்சிங் மாணவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம்,பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் முதலாமாண்டு நர்சிங் மாணவர்கள் இருவர் பலியானதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

கேரளத்தைச் சேர்ந்த ஸ்டெர்லின் எலிசா ஷாஜி (19) மற்றும் ஜஸ்டின் ஜோசப் (20) ஆகியோர் நகரத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பி.எஸ்.சி நர்சிங் பயின்று வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இருவரும் தங்கள் விடுதிக்குச் செல்லும் வழியில் சிக்கபனாவரா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது பெங்களூருவிலிருந்து பெலகாவிக்குச் சென்ற வந்தே பாரத் ரயில் மோதியது.

இந்த சம்பவதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த மரணங்கள் விபத்தா அல்லது தற்கொலையா என்பதைக் கண்டறிய சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மூத்த ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெங்களூரு கிராமப்புற ரயில்வே காவல் நிலையத்தில் இவ்விபத்தை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.