;
Athirady Tamil News

வெள்ளத்தில் சிக்கிய சிசுவை மீட்ட இந்திய மீட்பு குழு; குவியும் பாராட்டு

0

தித்வா புயல் இலங்கையில் மோச​மான பேரழிவை ஏற்​படு்த்​தி​ சென்றுள்ள நிலையில் , வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி பலர் உயி​ரிழந்​ததுடன் ​ , நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்ளனர்.

இந்நிலையில் இலங்கைக்கு உடனயா வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்​தி​யா​விலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (என்​டிஆர்​எப்) .

தைரிய​மான கரங்​களில் நம்​பிக்​கை

வெள்​ளத்​தில் சிக்கி உயிருக்கு போ​ராடிய ஆயிரக்​கணக்​கா னோரை இந்​திய படை மீட்ட நிலை​யில், MyGovIndia இன்​ஸ்​டாகி​ராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “தைரிய​மான கரங்​களில் நம்​பிக்​கை! இலங்​கை​யில் வெள்ள நிவாரண நடவடிக்​கை​யின்​போது வீட்​டில் தண்​ணீரில் தத்தளித்த பச்​சிளங் குழந்​தையை இந்​திய என்​டிஆர்​எப் வீரர் ஒரு​வர் கையில் ஏந்தி பத்​திர​மாக மீட்டு காப்​பாற்​றி​னார்.

நெருக்​கடி நிலை​யின்​போது, இந்​தி​யா​வின் தூய மனித நேயம், தைரி​யம், இரக்​கத்தை படம்​பிடித்து காட்​டும் ஒரு உன்னத தருணம் இது” என்று பதி​விடப்​பட்​டுள்​ளது.

இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் தற்​போது வைரலாகி வரு​கிறது. இதைப் பார்த்த இணை​ய​வாசிகள், இந்திய மீப்பு பணி குழுவினருக்கு பாராட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இலங்கை மக்கள் நன்றி
அதேவேளை நாடுவிட்டு நாடு வந்து, சேற்றிலும் வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து போராடி வரும் இந்திய மீட்பு வீரர்களும், மீட்பு நாய்களும் இன்று இலங்கை மக்களின் மனதில் ஆழ்ந்த மரியாதையை பெற்றுள்ளனர்.

வாழ்வும் மரணமும் நடுவே சிக்கிய அப்பாவி மக்களை கண்டுபிடித்து மீட்க, இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் (NDRF) மற்றும் K9 மீட்பு பிராணிகள், 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.

இந்த வீரர்களின் தன்னலமற்ற சேவை, இலங்கை – இந்திய நட்புறவின் உண்மையான அர்த்தத்தை உலகிற்கு உணர்த்துவதாக உணர்ச்சிப்பூர்வமாக இந்திய வீரர்களுக்கு இலங்கை மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.