பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023-ல் கைது செய்யப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, அடியாலா சிறையில் இம்ரான் கான் துன்புறுத்தப்படுவதாக, அவரின் மகன்கள் குற்றம் சாட்டிய நிலையில், இம்ரான் கானுக்கு சிறையில் ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகளைவிட மேம்பட்ட வசதிகள் தரப்படுவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் விளக்கமளித்தார்.
இதனிடையே, இம்ரான் கானை தனிமைச் சிறையில் இருந்து விடுவிக்க ஐநா அவையும் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.