;
Athirady Tamil News

பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சல்: 2 பேர் பலி

0

பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியுள்ளார்கள், 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பிரித்தானிய நகரமொன்றில் பரவும் மூளைக்காய்ச்சல்
இங்கிலாந்திலுள்ள Canterbury நகரில், ஒரு பள்ளி மாணவர் மற்றும் ஒரு பல்கலை மாணவர் என இரண்டுபேர் மெனிஞ்சைட்டிஸ் (meningitis) என்னும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள்.

மேலும் 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் அந்த நோய்க்கெதிரான ஆன்டிபயாட்டிக்குகளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கும் காட்சிகள் வெளியாகிவருகின்றன.

மாணவர்களிடையே பிரபலமான இரவு விடுதி ஒன்றிற்குச் சென்ற, பாதிக்கப்பட்ட யாரிடமிருந்தோ இந்த மூளைக்காய்ச்சல் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த மெனிஞ்சைட்டிஸ் என்னும் மூளைக்காய்ச்சல், மெனிஞ்சோகாக்கஸ் (Meningococcus) என்னும் பாக்டீரியாவால் உருவாகும் ஒரு பயங்கர நோயாகும்.

மெனிஞ்சைட்டிஸ் என்னும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், வாந்தி, கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, தலையை திருப்ப இயலாத அளவுக்கு கழுத்துவலி, குழப்பம், ஒளியைப் பார்க்க பிடிக்காமல் போதல் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படும்.

சரியான நேரத்துக்கு சிகிச்சை பெறாவிட்டால், இந்த மெனிஞ்சைட்டிஸ் என்னும் மூளைக்காய்ச்சல், மரணம் வரை கொண்டு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.