டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது
துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த போது கைது செய்யப்பட்டார்.