கிளிநொச்சியில் கடும் பனி மூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் பனி மூட்டம் நிலவுகின்றது.
நாட்டின் வடக்கு பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சாரதிகள் அவதானம்
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை கடும் பனி மூட்டத்துடனான வானிலை நிலவி வருகின்றது.
இதன் காரணமாக, குறித்த வீதியூடாக பயணிப்பவர்கள் கடும் சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.