;
Athirady Tamil News

யாழில். விபத்து – பிரான்ஸ் நாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்

0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர் வாடகை கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களின் கார் எதிரே வந்த ஆட்டோ வுடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதன் போது காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் மற்றும் கார் சாரதி , முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஆகிய ஐவரும் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.