;
Athirady Tamil News

மாமனிதர் எஸ்.பி. சாமி நினைவாக வேலணை பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டி!

0
மக்களின் நலன்களுக்காக உழைத்த மாமனிதர் எஸ்.பி. சாமி அவர்களின் நினைவாக 
வேலணை பிரதேச சபையின் அன்றாட பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில்
நோர்தர்ன் சென்ட்ரல் வைத்தியசாலையால்
முச்சக்கர வண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
 
அமரரான நோர்தர்ன் சென்ட்ரல்
வைத்தியசாலையின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் எஸ்.பி. சாமி அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
 
பிரதேச சபையிடம் இருக்கும் வாகனங்கள் உகந்த நிலையில் இல்லாத காரணத்தினால், வேலணை பிரதேச சபையின் அன்றாட நிர்வாக பணிகளை இலகுவாக்கவும் அதை நிவர்த்தி செய்யும் வகையில் முச்சக்கர வண்டி ஒன்று பெற்றுத்தருமாறு பிரதேச சபை விடுத்திருந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு ஒரு புதிய முச்சக்கர வண்டி நன்கொடையாக வழங்கியைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.