புறா தகராறில் கொடூர கொலை ; மூவர் கைது
பேலியகொடை – மீகஹவத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் நபரொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீகஹவத்த பகுதியில் வசிக்கும் 23 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடூரமாக வெட்டிக்கொலை
புறாக்கள் தொடர்பில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நபரொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைசெய்யப்பட்டவர் வத்தளை – ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். தகராறில் கொலை செய்யப்பட்டவரின் சகோதரனும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கொலை சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.