;
Athirady Tamil News

புத்தர் சிலை விவகாரம்… சரத் வீரசேகர வருகை ;திருக்கோணமலையில் இன்று பலத்த பாதுகாப்பு

0

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும் இன்றைய வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பெளத்த மதச்சங்களது பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலர் இன்றையதினம் குறித்த வழக்கிற்கு வருகை தந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதேசமயம் திருகோணமலை நகர் பூராகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.