பாகிஸ்தானில் அசம்பாவிதம்! 6 பேர் மரணம்..20 பேர் மீட்பு
பாகிஸ்தான் நாட்டில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பிரபல வணிக வளாகம்
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கடை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்த நிலையில், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அதற்குள் ஒரு கடையில் பற்றிய தீ மளமளவென அருகிலுள்ள கடைகளுக்கும் பரவியுள்ளது.
6 பேர் உயிரிழப்பு
இந்த நிலையில் தீயணைப்பு படையினர் போராட்டத்திற்கு பிறகு, உள்ளே சிக்கியிருந்த 20 பேர் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
துரதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் சிக்கியவர்களில் மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். முதலில் 3 பேர் இறந்ததாக தெரிய வந்தது.
அதன் பின்னர் மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.