;
Athirady Tamil News

யாழில். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி

0
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  துரையப்பா விளையாட்டரங்கில்  நடைபெற்றன.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விளையாட்டரங்குக்கு வருகை தந்த ஆளுநரை, தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பார்வையிட்டார்.

மாணவர் படையணியின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் இதன்போது நடைபெற்றன.

இந்நிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் உயர் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.