அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு தக்க பதிலடி – ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான்,
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு ஒத்துவரவில்லை என்றால் போர் தொடுத்து ஈரானை ஆக்கிரமிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்கமாக மிரட்டினார்.
இதற்கு ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி பதிலடி கொடுத்துள்ளார். அவர், “கடந்த ஆண்டு 12 நாள் போரில் இருந்து அமெரிக்கா தக்க பாடங்களை கற்றுக்கொண்டது. எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், எங்கள் நிலம், வான் மற்றும் கடல் பரப்பில் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடியாகவும், சக்தி வாய்ந்ததாகவும் பதிலளிக்க தயாராக உள்ளன.
அணுசக்தி தொழில்நுட்பத்திற்கான ஈரானின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்காவுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம்” என்றார்.