விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரட்டுகள் தீயிட்டு அழிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த பயணிகளிடமிருந்து இலங்கை சுங்கப் பிரிவினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் கையிருப்பு இன்று வெள்ளிக்கிழமை (30) அழிக்கப்பட்டது.
வத்தளை, கெரவலப்பிட்டியவில் இன்று முற்பகல் இந்த அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் சிகரட்டுகளைக் கொண்டுவருவதைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்த சிகரட் தொகுதிகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.