;
Athirady Tamil News

900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி: மருத்துவர்கள் தெரிவித்துள்ள நல்ல செய்தி

0

அபூர்வ நரம்புமண்டல நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு, 900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி ஒருத்தியால் தற்போது வாயை மூட முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

900 நாட்களாக வாயை மூட முடியாமல் தவித்த சிறுமி
கொல்கத்தாவில் அபூர்வ நரம்புமண்டல நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு, 912 நாட்களாக வாயை மூட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறாள் 10 வயது சிறுமி ஒருத்தி.

பல்வேறு மருத்துவமனைகளில் அவளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடைசியாக R Ahmed Dental College and Hospital என்னும் மருத்துவமனைக்கு அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர் அவளது பெற்றோர்.

வாயை மூட முடியாததால், தொற்று, பல் பிரச்சினைகள், வாய் உலர்தல், தாடையை சரியாக பயன்படுத்த முடியாமல் போதல் என பல பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உடனடியாக அவளது வாயை மூடவைத்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்த மருத்துவர்கள் ஒரு வித்தியாசமான சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, அவளுடைய வாயின் பின் பக்கமிருந்த பற்களை அதாவது, கடைவாய்ப்பற்களை அகற்றியுள்ளனர்.

மருத்துவர்களின் அந்த சிகிச்சையைத் தொடர்ந்து அந்த சிறுமியால் தற்போது தன் வாயை மூட முடிவதாக இன்று மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.