;
Athirady Tamil News

24 மணித்தியலங்களுக்கு… வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

0

நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தொட்டை, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் 50மில்லிற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை, அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.