;
Athirady Tamil News

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; துணை ராணுவத்தினர் 30 பேர் பலி

0

லாகூர்,

பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப்படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

தற்கொலைப்படை தாக்குதல்
இந்நிலையில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாடர் மாவட்டத்தில் உள்ள கடலோர காவல் படை முகாம் மீது இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் கடலோர காவல் படை முகாம் மீது மோதி வெடித்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் துணை ராணுவ வீரர்கள் 30 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.