;
Athirady Tamil News

600 கிலோ கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது

0

அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயகம பிரதேசத்தில் இருந்து (03) இரவு கம்பளை பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 600 கிலோகிராம் கழிவு தேயிலை ஏற்றிச் சென்றபோது அக்கரப்பத்தனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே கழிவுத் தேயிலை வேன் ஒன்றில் கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கழிவுத் தேயிலையை இவ்வாறு கொண்டு சென்று பல்வேறு நிறம் சேர்த்து (Color-added ) கழிவு தேயிலையின் தோற்றத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களைக் கவரக்கூடிய வகையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் அவர்கள் மூவரும் நாளை (04) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.