;
Athirady Tamil News

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி; ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு டிரம்ப் வாழ்த்து

0

வாஷிங்டன் டி.சி.,

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையில் முற்போக்கு ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டு ஆட்சியை முன்னின்று நடத்தி வந்த சூழலில், ஜப்பானில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது.

பிரதமரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வகையில், தகாய்ச்சியின் கட்சி 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஜப்பானில் நடந்துள்ள இந்த தேர்தல் ஜப்பானின் வருங்காலத்திற்கு மிக முக்கியம் வாய்ந்த ஒன்று. தகாய்ச்சி ஏற்கனவே வலிமையான, சக்தி படைத்தவர் மற்றும் அறிவாற்றல் படைத்த தலைவர் என நிரூபித்து இருக்கிறார். உண்மையாக நாட்டை நேசிப்பவர் அவர் என கூறினார்.

வருகிற மார்ச் 19-ந்தேதி வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்க நான் காத்திருக்கிறேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். சமீபத்தில், டிரம்பும் அவருடைய குழுவினரும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது அவருடைய தலைமையை டிரம்ப் பெரிதும் பாராட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.