;
Athirady Tamil News

இலங்கையில் பழைய சிம் அட்டைகளை பயன்படுத்துவோருக்கு வெளியான முக்கிய தகவல்

0

2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யவும், சிம் அட்டை விநியோகத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள 2019.08.02 அன்று வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், அதற்குப் பின்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர் தகவல்கள்
இதனால் 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பெறப்பட்ட பழைய சிம் அட்டைகளின் உரிமையாளர் தகவல்கள் மீண்டும் முறைப்படி பதிவு செய்யப்படும் என அமைச்சரவை முடிவில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதுவரை முறையாக உள்வாங்கப்படாத 16 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களைச் சந்தாதாரர்களாகப் பதிவு செய்யப் புதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகளை வழங்குவதில் புதிய ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.