;
Athirady Tamil News

மட்டக்களப்பில் அனாதரவாக உயிரிழந்த பெண்

0

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியை சேர்ந்த 67 வயதான இராசையா பாக்கியம் என்பவரே இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் என கூறப்படுகிறது. சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.