கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு கிராண்ட்பாஸ் வீட்டுத் தொகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 31 கிராம் 350 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 31 கிராம் 350 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.