;
Athirady Tamil News

மனைவியை தீ வைத்து எரித்த கணவன்: குடும்ப பிரச்சினையால் பறிபோன உயிர்!

0

குடும்பத் தகராறு முற்றியதில் கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(13.02.2026) பரசன்கஸ்வெவ – மெதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழப்பு
இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என்றும் தெரியவந்துள்ளது.

பரசன்கஸ்வெவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.