;
Athirady Tamil News

யாழ்.வரும் ஜனாதிபதி காணிகளை விடுவிக்க வேண்டும் – பலாலி மக்கள் போராட்டம்

0

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி எமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலி.வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 15ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மயிலிட்டி மக்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளில் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என போராடி வரும் நிலையில் பலாலி மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 15ஆவது ஞாயிற்றுக்கிழமையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.