தியாக தீபத்தின் நினைவாலயத்தில் சிலை இன்றி தொடரும் அஞ்சலி
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் வெண்கல சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றுள்ள நிலையில் , சிலையின் இருப்பிடத்திற்கு மலர் மாலை வைக்கப்பட்டு , மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாக தீபத்தின் நினைவாலயம் பகுதியில் தியாக தீபத்தின் 39ஆம் ஆனது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி வெண்கல சிலை வைக்கப்பட்டு , தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, நேற்றைய தினம் சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன
இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நினைவிவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் , இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நினைவாலயத்தில் சிலை அமைக்கப்பட்டிருந்த பகுதிக்கு மலர் மாலை வைத்து , மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
