பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியையின் மரணம்
நேற்று மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி , உயிரிழந்தார்.
ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி, கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர் . இசையமைப்பில் அதீத ஆர்வத்தோடு புத்தாக்கமிக்கவராக புதிய படைப்புகளை உருவாக்க கூடியவர், இந்திய முன்னணி இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், தீனா , ஆகியோரது பாராட்டையும் பெற்றவர்
கல்வி சமூகத்திற்கு பேரிழப்பு
அன்மையில் நாட்டில் ஏற்பட்ட ‘ தித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில் தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய “Rebuild Sri Lanka ” எனும் ஆங்கிலம் ,சிங்களம் ,தமிழ் , என மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினையும் இவர் வெளியிட்டார்.
இந்நிலையில் தீராத இசை ஆர்வமிக்க படைப்பாளியாகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்த செல்வி சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு, மலையக கல்வி சமூகத்திற்கு பேரிழப்பு என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.