;
Athirady Tamil News

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பலி

0

காலி – பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், மற்றையவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடையவர் எனவும், காணாமல் போனவர் 29 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
இவர்கள் இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினர், பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் மற்றும் பெந்தோட்டை பொலிஸார் இணைந்து காணாமல் போயுள்ள நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மாத்தறை – மிரிஸ்ஸ கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் ரஸ்ய நாட்டை சேர்ந்த, 29 வயதுடைய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது கடற்கரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கொடவில பொலிஸ் உயிர் காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால், குறித்த பெண் மீட்கப்பட்டு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.