;
Athirady Tamil News

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

0

கீவ்,

உக்ரைன் , ரஷியா போர் நேற்று 1,569வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டிரோன் தாக்குதல்
இந்நிலையில், ரஷியா மீது உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் சவஸ்டொபல், கிரிமியா, மரியபோல் (ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள பகுதி) ஆகிய இடங்களில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அருங்காட்சியகம் உள்பட பல்வேறு இடங்களில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.