;
Athirady Tamil News

திருகோணமலை பாடசாலை மாணவர்கள் 15 பேருக்கு ஒவ்வாமை

0

திருகோணமலை கந்தளாய் ஆயிஷா பெண்கள் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு ஒவ்வாமை காரணமாக, கந்தளாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணையில் மாணவர்களுக்கு உணவாக அன்னாசிப்பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை நேற்று (10) மஹதிவுல்வெவ பாடசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்களுக்கு பசும்பால் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.