;
Athirady Tamil News

போலி கனடா கடவுச்சீட்டுடன் லண்டன் பயணம் ; விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்

0

போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்க முயன்றபோது, அவர் சமர்ப்பித்த கனடா நாட்டு பயண ஆவணத்தில் முறைகேடுகள் இருப்பதை குடிவரவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த நபர் கடந்த வாரம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் இலங்கையர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், குடிவரவு சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு பயணப் பாதைகளை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தாய்லாந்து அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.