;
Athirady Tamil News

மத்திய கிழக்கு வான்வெளி மூடல் ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணப் பாதைகளில் மாற்றம்

0

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் வடக்கு நாடுகளுக்குச் செல்லும் SriLankan Airlines விமானங்கள் மாற்று வான்பாதை வழியாக இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த விமானங்கள் தற்போது சவூதி அரேபியா வான்வெளி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான சேவை அறிவித்துள்ளது.

இந்த மாற்று பயண பாதை காரணமாக சில விமான சேவைகளில் கூடுதல் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் பயணிகள் இதனை கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையால் பல சர்வதேச விமான சேவைகளும் தங்களது பயண திட்டங்களில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.