;
Athirady Tamil News

ஆப்கன் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் நிறைவடையவில்லை: பாகிஸ்தான்

0

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நீடித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போா் தொடுப்பதாக பாகிஸ்தான் அண்மையில் அறிவித்தது.

கடந்த வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தொடங்கிய இந்தப் போா் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதை அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் தாரிக் ஃபசல் செளதரி மறுத்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடா்வதாக அவா் தெரிவித்தாா்.

அந்நாட்டு தகவல் துறை அமைச்சா் அத்தாவுல்லா தராா் கூறுகையில், ‘பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில், இதுவரை சுமாா் 352 தலிபான்கள் உயிரிழந்தனா். 535 தலிபான்கள் காயமடைந்தனா். 130 ராணுவச் சாவடிகள் முழுமையாக அழிக்கப்பட்டன’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.