;
Athirady Tamil News

ஈரான் ஆன்மீகத் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பு

0

உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் இழப்பை ஒட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பாறுக் நஜித் தலைமையில் துக்க கொடி பரவலாக ஏற்றப்பட்டு துக்க தினம் ஞாயிற்றுக்கிழமை(2) இரவு அனுஸ்டிக்கப்பட்டது.

அத்துடன் அட்டாளைச்சேனை, பாலமுனை புறநகர் பகுதியிலும் இவ்வாறு பிரதி தவிசாளர் தலைமையிலான இளைஞர்களால் கொடிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் ஷுஹதா உயர்ந்த அயத்துல்லா அலி காமெனி அவர்களின் இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் அப்பாவி மாணவ குழந்தைகளை நினைவுகூர்ந்து பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளில் துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டது.இதன் போது பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம் றியாஸ் உட்பட பல இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.