;
Athirady Tamil News

ஈரான் போர் எத்தனை நாள்கள் வரை நீடிக்கும்? டிரம்ப் அதிர்ச்சி பதில்!

0

ஈரான் போர் எத்தனை நாள்கள் வரை நீடிக்கும்? என்பதற்கான பதில் அமெரிக்க வல்லரசின் அதிபரான டொனால்ட் டிரம்ப்பிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின.

ஈரான் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து தாக்குதலைத் தொடங்கியதும், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அதில் அதிபரின் மாளிகை, ஈரான் தலைமை மதகுரு இல்ல வளாகம் ஆகியவையும் அடங்கும். அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது.

இதனிடையே, அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா். அவரது கொலைக்குப் பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து, டிரம்ப் அளித்துள்ள பேட்டியில், “ஈரான் போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்கும்; இதிலிருந்து சில காலம் கூடவோ குறையவோ செய்யலாம்” என்றிருக்கிறார்! ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் 6 வாரங்கள் வரை நீடிக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் சொல்லியிருக்கிறார். இதனால் மத்திய கிழக்கில் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் (மார்ச் 2) பெரும் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.