;
Athirady Tamil News

செஷல்ஸ் தீவை சென்றடைந்த இந்திய போர் கப்பல் தர்காஷ்

0

விக்டோரியா,

இந்திய கடற்படையின் மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான தர்காஷ், தென்மேற்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தனது செயல்பாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று செஷல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு சென்றடைந்தது.

சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது
கட்டுமானம், பராமரிப்பு ஆகிய இரண்டிலும் ஒரு நிலையான கடல்சார் ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், செஷல்ஸ் கடலோர காவல் கப்பலான பிஎஸ் ஸோரோஸ்டரை இந்தியாவிலிருந்து செஷல்ஸுக்கு இந்த தர்காஷ் கப்பல் பாதுகாப்பாக அழைத்து சென்றது.

மேலும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள பொதுவான கடல்சார் சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டு திறனையும் இந்த பயணம் எடுத்து காட்டுகிறது.

ஒப்படைக்கப்படும்
இந்த பயணத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் ரோஹித் மிஸ்ரா, செஷல்ஸ் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இந்த பயணத்தின் போது கலாசாரம், சமூக நிகழ்வுகளும் நடைபெறும். மேலும் செஷல்ஸ் கடலோர காவல் கப்பலான பிஎஸ் ஸோரோஸ்டர் தொடர்பான முக்கிய உதிரிபாகங்கள், அத்தியாவசிய பொருட்கள் செஷல்ஸ் அரசிடம் ஒப்படைக்கப்படும்.

வலுப்படுத்துவதை நோக்கம்
தர்காஷ் கப்பலின் இந்த துறைமுக பயணமானது, இந்தியாவுக்கும் செஷல்ஸுக்கும் இடையிலான தோழமை, பரஸ்பர ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாக அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.