;
Athirady Tamil News

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கியது ஜப்பான்: அணுக்கழிவு சேமிப்பு நிரம்பும் அபாயம்

0

டோக்கியோ,

உலகளாவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள மின்சாரத் தேவையைச் சமாளிக்க, உலகின் மிகப்பெரிய ‘காஷிவாஸாகி-கரிவா’ அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை ஜப்பான் அரசு மீண்டும் இயக்கியுள்ளது. கடந்த 2011 புகுஷிமா அணு உலை பேரழிவிற்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மின்நிலையம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இது மீண்டும் திறக்கப்பட்டாலும், அணு உலையில் இருந்து வெளியாகும் ஆபத்தான கதிரியக்கக் கழிவுகளை நிரந்தரமாக சேமிக்க ஜப்பானிடம் தெளிவான திட்டம் இல்லை. இன்னும் 5 ஆண்டுகளில் இங்கிருக்கும் அணுக்கழிவு சேமிப்புக் குளங்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பும் அபாயம் உள்ளது.

இதற்கு தற்காலிகத் தீர்வாக, பசிபிக் பெருங்கடலில் உள்ள ‘மினாமிடோரி ஷிமா’ தீவில் கழிவுகளைக் கொட்ட அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால், முறையான திட்டங்கள் இல்லாத இந்த வேகம், எதிர்காலத்தில் பெரிய கதிரியக்கப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.