;
Athirady Tamil News

நாட்டில் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால!

0

நாட்டில் எந்த ஒரு வேளையிலும் இனவாதமும் மதவாதமும் தலை தூக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,என்னுடைய முக்கிய நோக்கம் இந்த பகுதியில் பொதுமக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுடைய சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் இந்த பகுதியில் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும்.

ஊருக்கு ஒரு நீதியும் பிரபலமானவருக்கு ஒரு நீதியும் என்ன நடைமுறைப்படுத்தப்படாது.
அனைவருக்கும் ஒரே வகையான நீதியே நடைமுறைப்படுத்தப்படும்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் பொலிசாருக்கு கட்டளை இடுகின்றோம். எங்களுடைய பிரதான நோக்கம் கட்சி ரீதியான மத ரீதியான எந்த ஒரு பிரிவினைவாதம் இல்லாத அனைவரும் ஒன்றாக வாழும் அனைவரும் ஒரே இனம் என்று ரீதியில் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும்.

இந்த நாட்டில் இந்த சூழலில் மீண்டும் ஒருமுறை இவ்வாறான முறுகல் நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பிரதேசத்தில் வாழும் பொதுமக்களுடைய பிரதான கடமைதான், உங்களுடைய சந்ததியினர் உங்களுடைய பிள்ளைகளுக்கு பொதுவான சந்தோஷமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவது.
அவ்வாறான ஒரு சூழல் உருவாகாத பட்சத்தில் இந்த நாட்டில் பிரிவினைவாதமும் வேறுபாடுகளும் தலை தூக்குவதற்கு இடம் ஏற்படும்.

ஆகவே எங்களுடைய பிரதான நோக்கம் எதிர்கால சந்ததியினருக்கு சந்தோசமாகவும் சகவாழ்வுடன் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது. நான் மிகவும் விசுவாசமாக இருக்கின்றேன். நடைமுறையில் உள்ள பொலிசார் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றார்கள்.

நாங்கள் பொதுமக்களுடன் சிநேகபூர்வமான சேவையை செய்வதற்கான வட மாகாணத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் மொழி தொடர்பாகவும் அனைத்து பொதுமக்களும் சிநேக பூர்வமாகவும் வேலை செய்வதற்கான சேவைகளை துரிதப்படுத்தி உள்ளோம்.
இந்த நாட்களில் பொலிஸ் சேவையில் பொலிஸ் தேர்வுகளில் ஆட்கள் இணைக்கப்படுகின்றார்கள். ஆகவே நீங்களும் இணைந்து கொண்டு இந்த பொலிஸ் சேவையை சக்தியான ஒரு சேவையாக மாற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

அதேபோல என்னுடைய குறுகிய காலத்தில் ஐந்தாவது தடவையாகும் நான் இந்த வடமாகாணத்திற்கு வருகை தந்துள்ளேன். நான் வருகை தந்த போதெல்லாம் என்னை கௌரவமாக வரவேற்ற பொது மக்களாகிய உங்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.