;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1829610.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்; கப்பல்களுக்கு எச்சரிக்கை

0

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், அதன் ஊடாகப் பயணிக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி (Ayatollah Ali Khamenei) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஜலசந்தி வழியாக செல்ல முயற்சிக்கும் கப்பல் தீக்கிரையாக்கப்படும்
ஈரான் ஆயுதப் படைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தொடர்ச்சியாகப் பழிவாங்கும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் தீக்கிரையாக்கப்படும்” என்று பிரிகேடியர் ஜெனரல் இப்ராஹிம் ஜப்பாரி திங்களன்று கூறியதாக ஈரான் இன்டர்நேஷனலை மேற்கோள் காட்டி தி காஸ்பியன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

நாங்கள் எண்ணெய் குழாய்களையும் தாக்குவோம், மேலும் ஒரு சொட்டு எண்ணெய் கூட இப்பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.