;
Athirady Tamil News

ஈரானுக்கு எதிரான போர் 10 நாட்களுக்கு மேல் நீடித்தால் சிக்கல்: டிரம்புக்கு பெண்டகன் எச்சரிக்கை

0

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து அமெரிக்கா-இஸ்ரேலை பழிதீர்ப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான் பதிலடியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள 27 அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில் குவைத், ஜோர்டானில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குவைத்தில் 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. ஈரானின் தாக்குதலில் 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதற்கிடையே ஈரான் மீது தொடர்ந்து அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் குண்டுகளை வீசி வருகின்றன.அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் இன்று 5-வது நாளில் நுழைந்துள்ள நிலையில், இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ஈரான் மீது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை வர உள்ளது. ஈரான் இனி அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாத வரை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடரும். அமெரிக்காவின் மிகக் கடுமையான தாக்குதல்கள் இன்னும் தொடங்கவில்லை. இந்த மோதல் 4 வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும். இதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது” என்றார்.

இந்த நிலையில், இன்னும் 10 நாட்களுக்கு போர் நீடித்தால் முக்கியமான ஏவுகணைகளின் கையிருப்பு தீர்ந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ்எம்3 போன்ற இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று பெண்டகன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.